கரூர் மாவட்டத்தில் பல்வேறு கல்குவாரிகள் செயல்பட்டு வரும் நிலையில் இன்று கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து சத்யா நிறுவனத்தின் சாதாரண கல் குவாரி மற்றும் கிராவல் குவாரிக்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தியது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கருத்துக்களை கேட்டனர்.அப்பொழுது பெரும்பாலான இருக்கைகள் காலியாக இருந்தது.
அதேபோல் சமூக ஆர்வலர்கள் சிலர் தற்போது வரவிருக்கும் கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அப்பகுதி ஆண்கள், பெண்கள் என சிலர் கல்குவாரிக்கு வரவேற்பு தெரிவித்தும்.கூடுதலாக பெண்கள் சிலர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் தங்களது விருப்ப மனுவையும் அளித்தனர்.