Skip to content
Home » கெஜ்ரிவால் கார் மீது கல்வீச்சு..

கெஜ்ரிவால் கார் மீது கல்வீச்சு..

டில்லி சட்டசபைக்கு பிப்.,5 ல் தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியை தக்க வைக்க ஆம் ஆத்மியும், ஆட்சியை பிடிக்க காங்கிரஸ், பா.ஜ.,வும் தீவிரமாக உள்ளன. தேர்தல் நெருங்குவதால் பிரசாரம் விறுவிறுப்பு அடைந்துள்ளது. ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றன. இந்நிலையில், டில்லியில் பிரசாரத்திற்கு சென்ற கெஜ்ரிவால் கார் மீது கல்வீசப்பட்டது. இதுவரை யாரும் கைதாகவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக ஆம் ஆத்மி வெளியிட்ட அறிக்கை.. தோல்வி பயத்தில் உள்ள பா.ஜ., குண்டர்கள் மூலம் கெஜ்ரிவால் சென்ற கார் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. கெஜ்ரிவாலை எதிர்த்து போட்டியிடும், பா.ஜ.,வின் பர்வேஷ் வர்மா, தொண்டர்கள் மூலம் கெஜ்ரிவால் பிரசாரத்திற்கு செல்வதை தடுக்க முயற்சித்துள்ளார். இதற்கு டில்லி மக்கள் பதிலடி கொடுப்பார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளது.