தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றும் அரசின் முடிவு குறித்து ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்களுடன் ஆட்சியர் ஆலோசனை நடத்தினார். ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது குறித்து மக்களின் கருத்தை தூத்துக்கடி ஆட்சியர் செந்தில் ராஜ் கேட்கிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில், ஆலை பராமரிப்பின்போது கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகள், மற்றும் இது தொடர்பான பல்வேறு விவாதங்கள் ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனைக்கூட்டத்திற்கு பிறகு ஆட்சியர் அளித்த பேட்டி: ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படு உள்ளது. ஆலை பணிகள் தொடர்பாக சார் ஆட்சியர் தலைமையில் 9 பேர் கொண்ட குழு கண்காணிப்பு பணியில் இருப்பார்கள். இந்த குழுவில் ஸ்டெர்லைட் ஆலையை சேர்ந்த 2 பேர் இருப்பார்கள். ஆலை பராமரிப்பு பணிகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெறும். ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை வைத்து பணிகள் நடைபெறும். கழிவுகளை அகற்றும் பணியின்போது 24 மணிநேரமும் பாதுகாப்புப்பணியில் போலீசார் ஈடுபடுவார்கள். ஸ்டெர்லைட் ஆலை கழிவுகள் அகற்றம் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் ஆய்வு குழு அறிக்கை தாக்கல் செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.
ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்புக்கு அனுமதி…… தூத்துக்குடி கலெக்டர் பேட்டி
- by Authour
