Skip to content

மாநில அளவில் சிலம்பம் போட்டி… கரூரில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு..

  • by Authour

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே லாலாபேட்டையில் “கருடா மார்ஷியல் ஆர்ட்ஸ் ஆஃப் இந்தியா” சார்பில் முதலாவது மாநில அளவிலான சிலம்பு போட்டி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான ஆர் .கே.ஸ்ரீ, ப்ளூபெர்ரி பப்ளிக் ஸ்கூல் தாளாளர் ராஜேஷ் ஆகியோர் போட்டியை துவக்கி வைத்து பரிசு கோப்பைகளை வழங்கினர். இந்த சிலம்ப போட்டியில் சேலம், நாமக்கல், கரூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய

மாவட்டங்களில் இருந்து சுமார் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கு பெற்றனர். இதில் ஓவர் ஆல் சாம்பியன்ஷிப் முதல் பட்டத்தை மாயனூர் டான்சன் பள்ளியும் லாலாபேட்டை கருடா மார்ஷியல் ஆர்ட்ஸ் இரண்டாவது இடம் பெற்றது, தொட்டியம் ஸ்ரீ சபரி வித்யாலயா மூன்றாவது இடம் பெற்றது.

நிகழ்ச்சியில் கருடா மார்ஷியல் ஆர்ட்ஸ் நிறுவனர், தமிழ்நாடு விளையாட்டு சிலம்பம் அசோசியேஷன் கரூர் மாவட்ட செயலாளர் சந்திரசேகர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.

error: Content is protected !!