எஸ் டி பி ஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் உள்ள தலைமை அலுவலகத்தில் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நெல்லை முபாரக் கூறியதாவது:
தமிழக அரசு கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணங்களுக்கு முழு அளவில் பொறுப்பு ஏற்க வேண்டும். இதை முன்பே கண்காணித்து இருந்தால் இந்த மரணத்தை தவிர்த்திருக்கலாம். இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். தமிழக அரசே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
தமிழக அரசு Tan Tea நிறுவனம் மூலமாக மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை எடுத்து நடத்த வேண்டும். அந்த மக்களுக்கு குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் .தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்குஅளிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.