கரூர் உழவர் சந்தை அருகே அமைந்துள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில், தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் மாநிலத் தலைவர் பொன் ஜெயராம் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பட்டப்படிப்பு மற்றும் பிஎட் முடித்த தகுதி பெற்ற அமைச்சுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வில் வட்டார கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் பணி வழங்கிட வேண்டும், மாவட்டங்களில் செயல்படும் அரசு மாதிரி பள்ளிகளில் பணிபுரிந்து வரும் அமைச்சுப் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம்
வழங்கிட வேண்டும், ஆய்வக உதவியாளர் பணியிடத்திலிருந்து இடைநிலை உதவியாளராக பணி மாறுதல் மூலம் நியமனம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு இடைநிலை உதவியாளர் பதவியிலிருந்து மீண்டும் பதவியிறக்கம் செய்வது மற்றும் சிறப்பு நிகழ்வாக கருதி பணி மாறுதல் பெற்று பணி புரிந்தவர்களுக்கு ஒரே அரசாணையில் தகுதி காண்பவரும் முடித்து ஆணை வழங்கிய வேண்டும் ஆய்வக உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கக்கூடிய வகையில் உரிய விதி திருத்தம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகள் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
மேலும் 10.10.2024 அன்று முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் கோரிக்கை மனுவினை அனைத்து உயர் அலுவலர்களுக்கும் அனுப்பப்பட உள்ளது, அதனை தொடர்ந்து நவம்பர் 6-ம் தேதி மாவட்ட தலைநகரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.