சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த 22 வயதுடைய இளம்பெண் ஒருவர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 11ம் தேதி ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இரண்டு நாட்கள் சிகிச்சை பெற்று வந்த அப்பெண்ணுக்கு வயிற்றில் ஸ்கேன் எடுக்க வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் ஆஸ்பத்திரி ஊழியர்கள் அந்த பெண்ணை ஸ்கேன் மையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அதுமட்டுமின்றி இந்த விவகாரத்தை வெளியே சொல்ல வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெண் நோயாளி இது குறித்து தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் மருத்துவர் கோகுல கிருஷ்ணன் மீது பெண் வன்கொடுமை உள்ளிட்ட 6 பிரிவின் கீழ் வழக்குப்திவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரபல ஸ்டான்லி மருத்துவமனையில் பெண் நோயாளியிடம் மருத்துவர் ஒருவர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சம்பவம் நோயாளிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.