கர்நாடகத்தில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. இதையொட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். போனில் அவர்களை தொடர்பு கொண்டு கர்நாடக வெற்றிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். அதுபோல காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கேவுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
