திருச்சி மேயரும், மாநகர திமுக செயலாளருமான அன்பழகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நாளை(வியாழன்) மாலை 5.30 மணியளவில் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளிள் கலந்துகொள்ள சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சி வருகை தர உள்ளார்.
கழக முதன்மை செயலாளர், தமிழ்நாடு அரசு நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் மாண்புமிகு.அண்ணன் கே.என்.நேரு அவர்கள் வழிகாட்டுதல் படி
மத்திய மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர்.க.வைரமணி, M.A.,B.L மாநகர செயலாளர் மேயர்.மு.அன்பழகன் MA ஆகியோர் தலைமையில் விமான நிலையத்தில் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க இருக்கிறார்கள்.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட கழக,மாநகர கழக நிர்வாகிகள், பகுதி கழக,வட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள், மாமன்ற உறுப்பினர்கள், அனைத்து அணியை சேர்ந்த நிர்வாகிகள், கழக மூத்த முன்னோடிகள், செயல்வீரர்கள் தவறாது கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.