தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை தொடக்க விழா சென்னை எம்ஆர்சி நகரில் இன்று மாலை நடந்தது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அறக்கட்டளை விளம்பர தூதரும், சிஎஸ்கே அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் டோனி, விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஆகியோரும் கலந்து கொண்டனர். விழாவில் அறக்கட்டளைக்கான சின்னம், சிறப்பு பாடலை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
விழாவில் பேசிய முதல்வர், தமிழகத்தில் உள்ள அனைவரையும் போல், நானும் டோனி ரசிகன். சென்னையின் செல்லப்பிள்ளை டோனி தொடர்ந்து விளையாட வேண்டும் என விரும்புகிறேன். தமிழகத்தில் உள்ள அனைத்து விளையாட்டுக்களிலும் பல டோனிக்களை உருவாக்க வேண்டும். டோனி சொந்த உழைப்பால் வளர்ந்தவர். அதனால் தான் இன்று விளம்பர தூதராக உள்ளார். விளையாட்டு துறையை மேம்படுத்தும் நோக்கில், சாம்பியன்ஸ் அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது. அறக்கட்டளைக்கு தனிப்பட்ட முறையில் ரூ.5 லட்சம் நிதி வழங்குவேன் என்றார்.
