சென்னை பல்லாவரத்தில் இன்று நடந்த அரசு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், தமிழகத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடிக்கு நன்றி. மாநில அரசுக்கு தேவையான திட்டங்களை மத்திய அரசு தரும்போது தான் நாடு வளர்ச்சி அடையும். சென்னையிலிருந்து மதுரைக்கு வந்தே பாரத் ரயில் சேவை தேவை. இந்தியாவின் 2வது பெரிய பொருளாதார மாநிலமான தமிழகத்துக்கு போதிய ரயில்வே திட்டங்கள் வழங்கப்படவில்லை. மத்தியில் கூட்டாட்சி இருக்க வேண்டுமானால் மாநிலத்தில் சுயாட்சி இருக்க வேண்டும்.
திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட விமான நிலைய விரிவாக்கத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கி பணிகளை விரைவு படுத்த வேண்டும். மெட்ரோ 2வது ரெயில் திட்ட பணிகளுக்கு மத்திய அரசின் பங்களிப்பு 2 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. சென்னை – மதுரை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்க வேண்டும். அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் வந்தே பாரத் ரயில் சேவைக்கான கட்டணத்தை குறைக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.