முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக தொகுதி பார்வையாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் பேசிய விவகாரங்கள் மூத்த நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 72 மாவட்ட செயலாளர்கள் மற்றும் 234 தொகுதி பார்வையாளர்கள் பங்கேற்றனர். ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் இருந்த படி காணோலியில் பேசிய முதல்வர் ஸ்டாலின்.. விரைவில் வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் 40க்கும் 40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றாக வேண்டும். மூத்த நிர்வாகிகள் விட்டு கொடுத்து பணியாற்ற வேண்டும். இந்த தேர்தலில் கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் தோல்வியடைந்தால், அதற்கு காரணமானவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பேன். அதேபோல் தேர்தல் பணிகளில் தொய்விருந்தால் மூத்த நிர்வாகி, அமைச்சர் என யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டேன். தொகுதி பார்வையாளர்கள் வாரத்திற்கு ஒருமுறை, தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளுக்கு சென்று நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். கோஷ்டிப் பூசலை மனதில் வைத்துக் கொண்டு நாடாளுமன்றத் தேர்தலில் யாரேனும் வேலையை காட்டினால் அப்போதிருக்கிறது கச்சேரி என்பதை சூசகமாக உணர்த்தியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.