பெரம்பலூர் மாவட்டத்தில் அவ்வப்போது மழை செய்து கொண்டிருக்கிறது .இந்நிலையில் பெரம்பலூர் நகரப் பகுதியில் உள்ள வடக்கு மாதவி சாலையில் ராயல் நகர் 2வது கிராஸ் பகுதியில் 50 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் பதினைந்து நாட்களாக சாலையில் மழைநீர் தேங்கியுள்ளது. மழை நீரை வெளியேற்ற நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கும் எடுக்காமலும் அலட்சியம் காட்டி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு டெங்கு மலேரியா, மர்ம காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு வயது சிறுமிக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இருந்தபோதிலும் நகராட்சி நிர்வாகம் அப்பகுதியில் சென்று எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதினால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்துடன் வேதனையுடன் உள்ளனர் . இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று ராயல் நகர் இரண்டாவது ஸ்ட்ரீட் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேங்கி நிற்கும் மழைநீர்…நோய் பரவும் அபாயம்.. அதிகாரிகள் அலட்சியம்…
- by Authour
