நடிகை ஸ்ருதிஹாசன், சாந்தனு என்ற டாட்டூ ஆர்டிஸ்ட்டை காதலித்து வந்தார். இருவரும் மும்பையில் ஒரே வீட்டில் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தனர். அவ்வப்போது, சாந்தனுவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்து வந்தார் ஸ்ருதிஹாசன். ‘திருமணம் எப்போது?’ என்ற கேள்வி எழும்போதெல்லாம் பதில் சொல்லாமல் தவிர்த்து வந்தார் ஸ்ருதி.
இந்நிலையில், சமூகவலைதளப் பக்கத்தில் இருந்து திடீரென சாந்தனுவை அன்ஃபாலோ செய்துள்ளார் ஸ்ருதி. மேலும், சாந்தனுவுடன் இருக்கும் தனது பிறந்தநாள் கொண்டாட்டம், தமிழ் புத்தாண்டு என பகிர்ந்த அனைத்துப் புகைப்படங்களையும் தனது பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார். இதனால், இருவருக்குள்ளும் பிரேக்கப்பா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஒரே நேரத்தில் சாந்தனுவும் ஸ்ருதியை சமூகவலைதளப் பக்கங்களில் இருந்து அன்ஃபாலோ செய்துள்ளார். ‘சிலரின் உண்மை முகங்கள் இப்போதுதான் தெரிய வந்துள்ளது’ எனப் புதிரான ஒரு பதிவையும் பகிர்ந்துள்ளார் ஸ்ருதி. சாந்தனுவுக்கு முன்பு லண்டனைச் சேர்ந்த மைக்கேல் என்பவரை ஸ்ருதிஹாசன் டேட் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
அந்த உறவில் இருந்து பிரிந்த பின்னரே அவர் சாந்தனுவுடன் லிவ்வினில் இருந்தார். இப்போது கடந்த ஒரு மாதமாகவே சாந்தனு- ஸ்ருதி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகத் தெரிகிறது. இதை கவனித்த ரசிகர்கள் ‘’இனிமேல்’ வீடியோ பாடலில் லோகேஷ் கனகராஜூடன் நெருக்கம் காட்டியது இதனால் தானா?” என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.