திருச்சி அண்ணா ஸ்டேடியம் அருகே இயங்கும் SRM நட்சத்திர ஹோட்டல், சுற்றுலாத்துறைக்கு சொந்தமான இடத்தில் இயங்குகிறது. இந்த ஓட்டலின் குத்தகை காலம் முடிந்ததால், இடத்தை அரசிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என கேட்டு சுற்றுலாத்துறை மற்றும் வருவாய்த்துறை, காவல் துறை அதிகாரிகள் ஓட்டலுக்கு வந்தனர்.
அப்போது ஓட்டல் நிர்வாகத்துக்கு ஆதரவாக பாஜக, ஐஜேகே கட்சிக்காரர்கள் அங்கு திரண்டு வந்து அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடக்கிறது.