ஸ்ரீவைகுண்டம், ஏரல் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை படகு மூலம் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. திமுக துணைப் பொதுச் செயலாளரும்,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி அவர்கள் தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன் (NDRF) இணைத்து பாதிக்கப்பட்ட
மக்களை படகு மூலம் மீட்டார். மேலும், வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். தூத்துக்குடியில் வௌ்ளப்பாதிப்பு ஏற்பட்டதிலிருந்து களத்தில் இறங்கி போராடி மக்களை மீட்டு வருகிறார். வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் எம்பி கனிமொழிக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.