ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சொர்க்கவாசல் திறப்பு விழா வருகிற ஜன 10ந்தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு வருகின்ற 30ந் தேதி வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்க உள்ளது. இதையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டு வருகிறது இதனை இன்று இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது….
சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கு மட்டும் 2.5 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி திருவிழா அன்று பக்தர்கள் கோவிலிலேயே தங்குவதற்கு 50 யூனிட் மணல் மணல்வளியில் கொட்டப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் திருவரங்கம் கோவிலுக்கு நிரந்தர கார் மற்றும் பஸ் பார்க்கிங் வசதி செய்து தரப்படும்
ரூ2.25 கோடி செலவில் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் கிழக்கு கோபுர வாயில் திறக்கப்படும்
வயலூர் முருகன் கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணிகள் நிறைவு பெற்று வருகின்ற பிப்ரவரி 19 ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. மலைக்கோட்டையில் ரோப் கார் அமைப்பதற்கு தேவையான முயற்சியை மேற்கொள்வோம்
திமுக ஆட்சி அகற்றும் வரை காலனி அணிய மாட்டேன் 48 நாட்கள் விரதம் இருப்பேன் என தெரிவித்திருப்பது அவருடைய நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக இருக்கும் – அண்ணாமலை பகல் கனவு காண்கிறார் அது எப்போதும் நிறைவேறாது. இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார். பேட்டியின் போது பழனியாண்டி எம்எல்ஏ மற்றும் திருவரங்கம் கோவில் அதிகாரிகள் உடன் இருந்தனர்.