பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவதும் 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாக விளங்கும் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் பூபதி திருநாள் என்று அழைக்கப்படும் தைத்தேர் உற்சவம் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம் அதன்படி இந்த ஆண்டிற்கான உற்சவம் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
உற்சவ நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை வேலைகளில் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து ஹம்ச வாகனம், யாழிவாகனம், கருட
வாகனம், அனுமந்த வாகனம், யானை வாகனம், தங்க குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் திருவிதி உலா நடைபெற்றது..
முக்கிய நிகழ்வான தைத்தேர் உற்சவத்தின் ஒன்பதாம் திருநாள் முக்கிய நிகழ்ச்சியான தை தேரோட்டம் இன்று காலை வெகு விமர்சியாக நடைபெற்றது.
முன்னதாக அதிகாலை 4.30 நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து முத்துப்பாண்டியன் கொண்டை, ரத்தின அபயஹஸ்தம், ரத்தின காதுகாப்பு உள்ளிட்ட திரு ஆபரணங்கள் அணிந்த படி புறப்பட்டு தைத்தேர் மண்டபம் வந்தடைந்தார் பின்னர் உபநாச்சியார்கள் புறப்பட்டு தனித்தனியே தேருக்கு வந்தடைந்தனர் பின்னர் அலங்கரிக்கப்பட்ட தை தேரில் உப நாச்சியார்களுடன் நம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
நான்கு உத்தர வீதிகளிலும் தேரை பெரும் திரளான பக்தர்கள் ரங்கா ரங்கா கோவிந்தா என கோஷமிட்டு வாரு தேரை வடம் பிடித்து இழுத்தனர்…
நாளை ஆளும் பல்லாக்குடன் தை தேர் உற்சவம் நடைபெறுகிறது…
விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில் இணை ஆணையர் மாரியப்பன் தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர் ..