ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் 108 வைணவத் தலங்களில் முதன்மையானது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். இந்த கோயிலின் உள்ளே கொடிமரம் முன்பு கம்பத்தடி (தங்க கொடிமரம்) வரை ஶ்ரீரங்கம் ஶ்ரீரங்கநாதசுவாமி மூலவர் திருவடியை பழைய படி சீரமைக்கவும், கம்பத்தடி ஶ்ரீஹனுமான் முன்பு இருந்த ஆஸ்தானத்தில் மீண்டும் எழுந்தருள செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஶ்ரீராமானுஜ அடியார்கள் குழாம் கோயிலுக்குள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சுமார் 200க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.