ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி திருக்கோயில் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு ஆண்டாள் திருக்கோயிலில் இருந்து ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாளுக்கு பட்டு வஸ்திரங்கள் , கிளி மாலை ,மற்றும் மங்கல சீர்வரிசை பொருட்களை ஸ்ரீவில்லிபுத்தூர் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் அர்ச்சகர்கள் ரமேஷ் பட்டர் , சுதர்சன் பட்டர் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் கொண்டு வரப்பட்டு ஸ்ரீரங்கம் கருட மண்டபத்தில் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் மாரிமுத்ததுவிடம் வழங்கினர் .
இவு மங்கள பொருட்களையே நாளை சித்திரை தேரோட்டத்திற்கு ஸ்ரீ நம்பருமாளுக்கு சாற்றி சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று அதனைத் தொடர்ந்து தேரை வடம் பிடித்து இழுப்பானர். இந்நிகழ்வில் கண்காணிப்பாளர்கள் கோபாலகிருஷ்ணன் ,தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர், மீனாட்சி , சரண்யா , வெங்கடேசன் , துணை மேளாலர் சண்முகவடிவு , திருக்கோயில் பணியாளர்கள் மற்றும்
பக்தர்கள் கலந்து கொண்டனர் . நாளைய தினம் தேரில் சுமார் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் காவல்துறை சார்பாக போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் அவர்களுக்கு குடிநீர் வசதி மற்றும் கழிப்பிட வசதி பாதுகாப்பு பணியிற்காக சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.