சுதந்திர போராட்ட தியாகி ராமசாமி படையாட்சியின் 108 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருஉருவப்படத்தை ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி வன்னியர் சங்கம் சார்பில் இன்று நடைபெற்றது.
அப்போது சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீரங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் இந்நிகழ்ச்சிக்கு அனுமதி இல்லை எனக் கூறி படத்தை அங்கிருந்து அகற்றி காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றார்.
இதனையடுத்து ராமசாமி படையாட்சி படத்தை அவமரியாதை செய்த அரங்கநாதன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வன்னியர் சங்கத்தினர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல் நிலையம் முன்பு முற்றுகையிட்டு
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கம் காவல் துணை ஆணையர் நிவேதா லட்சுமி தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்ற பின்னர் போலீசார் ராமசாமி படையாட்சி படத்தை மீண்டும் அதே இடத்தில் கொண்டு வந்து வைத்தனர். இதனையடுத்து அவரது உருவப்படத்திற்கு வன்னியர் சங்க பொறுப்பாளர் ராஜேந்திரன், படையப்பா ரெங்கராஜ், சந்தோஷ், சக்தி, தியாகு ,
போட்டோ சரவணன், காங்கிரஸ் சிவாஜி சண்முகம், அஇஅதிமுக டைமண் திருப்பதி,
வன்னியர் சங்கத்தினர், பாமகவினர் மற்றும் அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.