திருச்சி பிரபல ரவுடி திலீப்பின் ஆதரவாளர் , ஸ்ரீரங்கம் ரவுடி அன்பு (எ) அன்பரசன் ( 32) நேற்று முன்தினம் காலை இவர் ஸ்ரீரங்கத்தில் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்டார். பட்டப்பகலில் ஒரு கும்பல் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டது. கொலை செய்யப்பட்ட அன்பு மீதும் பல வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட தினேஷ் பாபு, லோகேஷ், மகாபிரபு, அய்யனார், ரகு, கோபால கிருஷ்ணன் ஆகிய, 6 பேரை ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்தனர். இந்த கொலை தொடர்பாக ஸ்ரீரங்கம் வடக்குவாசலை சேர்ந்த தீபக் ராகுல் உட்பட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் ரவுடிகள் தினேஷ் பாபு, லோகேஷ், ரகுபதி ஆகியோரை ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் எதிரே கொள்ளிடக் கரையில் பதுங்கியிருந்தபோது, அவர்களை கைது செய்ய முயற்சி செய்த ஸ்ரீரங்கம் சிறப்பு உதவி ஆய்வாளர் பூபதி, தலைமை காவலர் முகமது ரஃபீக் ஆகியோருக்கு அரிவாளால் வெட்டிவிட்டு தினேஷ் பாபு, ரகுபதி ஆகிய இருவர் போலீசாரிடமிருந்து தப்ப முயன்றபோது கீழே விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. லோகேஷ் என்பவர் கீழே விழுந்ததில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. 3 பேரையும் போலீசார் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர்.