திருச்சி, ஸ்ரீரங்கம் போலீஸ் நிலைய சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி தலைமையிலான போலீசார் கல்லணை ரோடு தங்கையன் கோவில் பகுதியில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மணல் ஏற்றிக்கொண்டு வந்த ஒரு லாரியை மடக்கிப் பிடித்தனர். பின்னர் விசாரித்த போது இரண்டரை யூனிட் மணல் உரிய அனுமதி இல்லாமல் கடத்தி வந்தது தெரிய வந்தது.
அதை தொடர்ந்து மணல் மற்றும் லாரியை கைப்பற்றிய போலீசார் அதனை கடத்தி வந்த திருவானைக்காவல் திம்மராயன் சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த ஏபிஆர் மணிகண்டன் (வயது 30) திருவெறும்பூர் பெரியார் தெரு பகுதியை சேர்ந்த சுக்கிரன் ( 50) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இதில் மணிகண்டன் ரவுடி பட்டியலில் உள்ளார் மேலும் தப்பி ஓடிய திருவானைக்காவல் மாளிகை புறம் பகுதியைச் சேர்ந்த உதயகுமார் (43)என்பவரை தேடி வருகின்றனர்.