Skip to content

மாநில திறனாய்வு போட்டி…. ஸ்ரீரங்கம் இன்ஸ்பெக்டர் 2 பதக்கம்… கமிஷனர் பாராட்டு…

  • by Authour

தமிழ்நாடு காவல்துறையினருக்கு ஆண்டுதோறும் மாநில அளவிலான திறனாய்வு போட்டிகள் (State level Police Duty Meet – 2023) சென்னையில்  5 தினங்கள் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழகத்தில் இருந்து பல்வேறு மண்டலத்தை சேர்ந்தகாவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.

திருச்சி மாநகர காவல் ஆணையர் .ந.காமினி அறிவுறுத்தலின்படி, திருச்சி மாநகர காவல்துறை சார்பில் 1 காவல் ஆய்வாளர், 2 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 1 சிறப்பு உதவி ஆய்வாளர் என 4 பேர் கலந்து கொண்டனர்.

தடய அறிவியல் (Forensic science), தடய மருத்துவவியல், கைரேகை, சட்ட நுணுக்கங்கள் (LAW) என 6 பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் 95 காவல் ஆய்வாளர்கள் முதல் காவல் ஆளிநர்கள் வரை கலந்து கொண்டார்கள். மேலும் போட்டிகளில் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர்  போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் .வனிதா  , மாநில அளவில் தடய அறிவியல் பிரிவில்   2-ம் பரிசும், தடய மருத்துவவியலில் (Forensic Medico Legal) 3-ம் பரிசும் என மொத்தம் 2 பதக்கங்களை வென்றாா்.  2 பதக்கங்களை வென்ற ஸ்ரீரங்கம்  ஆய்வாளர்  வனிதா  அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார்.

திருச்சி மாநகர காவல்துறை சார்பாக போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர்  காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வனிதாவை   மாநகர போலீஸ்  கமிஷனர் காமினி,  நேரில்  அழைத்து  பாராட்டி இன்ஸ்பெக்டருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.  மேலும் தேசிய அளவிளான போட்டியில் கலந்து கொள்ள ஆலோசனைகள்மற்றும் அறிவுரைகளை வழங்கினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *