திருச்சி காவிரி ஆற்றில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதலை நடமாட்டம் இருந்து வந்தது.. இதையடுத்து காவிரி ஆற்றில் வனத்துறையினர் ஆய்வு நடத்தி அந்தப் பகுதியில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது இதனால் காவிரி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் ஓடுகிறது. இதையடுத்து நேற்று இரவு திருச்சி மலைக்கோட்டையில் இருந்து ஸ்ரீரங்கம் செல்லும் வழியில் காவிரி ஆற்றுப்பாலத்தில் வாலிபர் நின்று கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்துக்கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று ஸ்ரீரங்கம் காவிரி பாலத்தில் பாலத்தில் இருந்து ஒரு கல்லை எடுத்து ஆற்றில் வீசி உள்ளார். அப்பொழுது திடீரென்று ஒரு முதலை
ஆற்றில் வேகமாக நீந்தி சென்றது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர் உடனடியாக தனது சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போனை எடுத்து ஆற்றில் நீந்தி சென்ற முதலையை விடியோ பதிவு செய்தார், இரவு நேரம் என்பதால் முதலை தெளிவாக தெரியவில்லை.
இருந்த போதிலும் காவிரி ஆற்றில் முதலில் நடமாட்டம் இருப்பது உறுதியாகி உள்ளது. காவிரி ஆற்றில் குளிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் முதலை நடமாடுவது திருச்சி பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்திள்ளது.