திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையில் புரட்டாசி மாத மஹாளய அமாவாசையை முன்னிட்டு பல்லயிரக்கணக்கான பொதுமக்கள் அதிகாலை முதல் கூடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர் – அம்மாவாசைகளில் சிறந்த அம்மாவாசையாக கருதப்படுவதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கூடிய பொது மக்கள் …
அம்மாவாசை என்றாலே முன்னோர்களை நினைவில் கொள்ள வேண்டும் என்பது ஐதீகம் – அந்த வகையில் தங்களது முன்னோர்கள் உயிரிழந்த நாள், நட்சத்திரத்தில் வீடுகளில் தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் – முன்னோர்களுக்கு திதி கொடுக்க தவறியவர்கள், மேலும் வீட்டில் உள்ள பல முன்னோர்களுக்கு ஒரே நாளில்
தர்ப்பணம் கொடுப்பவர்கள் பொதுவாக ஆடி அமாவாசை தை அமாவாசை மற்றும் புரட்டாசி அமாவாசை நாட்களில் கடற்கரை அல்லது ஆற்றங்கரையில் ஒன்று திரண்டு தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபடுவார்கள்.
அந்த வகையில் மிகவும் விஷேசமான மகாளய அம்மாவாசையான இன்று பெரும்பாலானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்பனம் கொடுக்க திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறைக்கு வந்திருந்தனர். மேலும் திருச்சி மட்டும் அல்லாமல் கரூர்,பெரம்பலூர் அரியலூர், புதுக்கோட்டை போன்ற பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையில் ஒன்று கூடி அதிகாலை முதலே தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
தேங்காய் பழங்கள்,பூ அகத்தி கீரை போன்றவற்றை வைத்து தங்களது முன்னோர்களை வழிபட்ட பின்னர் பசு மாட்டிற்கு அகத்தி கீரையை கொடுக்கும் மக்கள் – ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 200க்கும் அதிகமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்
பட்டுள்ளனர்.