ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடந்து வருகிறது. பகல் பத்து 3ம் திருநாளான இன்று நாச்சியார் திருமொழிக்காக நம்பெருமாள் – மாம்பழ நிற பட்டு அணிந்து அஜந்தா சௌரிக் கொண்டை அணிந்து, கலிங்கத்துராய் கல் இழைத்த ஒட்டியாணம் கீரடத்தில் நெற்றி கட்டாக அணிந்து, வைர அபய ஹஸ்தம், கல் இழைத்த கோலக் கிளி; மார்பில் பங்குனி உத்திர பதக்கம், அடுக்கு
பதக்கங்கள், நெல்லிக்காய் மாலை, 6வட முத்து சரம் பின்புறம் அண்ட பேரண்ட பக்ஷி பதக்கம், புஜ கீர்த்தி,திருக் கைகளில் தாயத்து சரம் , ரத்தின திருவடி அணிந்து புறப்பாடு கண்டுருளினார். ஏராளமான பக்தர்கள் நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.