Skip to content
Home » ஸ்ரீரங்கம் பகல் பத்து 2ம் திருநாள்: முத்து சாய்வு கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் பகல் பத்து 2ம் திருநாள்: முத்து சாய்வு கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்

  • by Authour

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில்  வைகுண்ட ஏகாதசி விழா நேற்று முன்தினம்  திரு நெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது.   இன்று பகல் பத்து  இரண்டாம் திருநாள் நடக்கிறது.

இதையொட்டி நம்பெருமாள் முத்து சாய்வுக் கொண்டை, கஸ்தூரி திலகம், நவரத்தின காதுக் காப்புகள் மார்பிலே பூஜகீர்த்தி கவசங்கள், மகாலட்சுமிபதக்கம், ரத்தின அபய ஹஸ்தம், முத்து பவளமணி மாலைகள்,

காலில் தங்கத் தண்டைக் கொலுசு காப்புகள் உள்ளிட்ட சிறப்பு திருவாபரணங்கள் அணிந்து கோயில் அர்ஜுன மண்டபத்திலே ஆஸ்தானமிருந்து, அரையர்கள் அபிநயத்தோடு இசைக்கும் திவ்யபிரபந்தத்தின் தீந்தமிழ் திருமொழிப் பாசுரங்களைக் கேட்டவாறு பக்தர்களுக்கு அர்ஜுனமண்டபத்தில் சேவை சாதிக்கிறார்.