திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ராஜ கோபுரம் உள்பட மொத்தம் 21 கோபுரங்கள் உள்ளன. இதில் கிழக்குவாசல் நுழைவு வாயில் கோபுரத்தின் 2 நிலைகளில் மேற்கூரை பூச்சு இடிந்து விழும் நிலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.இதனால் அபாயகரமான நிலையில் உள்ள கோபுரம் வழியாக பக்தர்கள் பயணிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் கோவிலின் கோபுரங்கள், மதில் சுவர்களை முறையாக ஆய்வு செய்து பராமரிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து கோயில் அதிகாரியிடம், விசாரித்தபோது ஏற்கனவே இதனை கண்டுபிடித்து, இதனை பராமரிக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. பக்தர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது என்றார்.