ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் நேற்று ஆந்திர மாநில பக்தர்கள் , செக்கியூரிட்டிகளால் தாக்கப்பட்டதாக செய்தி வெளியானது. இந்த மோதல் தொடர்பாக செக்கியூரிட்டிகளும், ஆந்திர பக்தர் சென்னாராவ் என்பவரும் ஸ்ரீரங்கம் போலீசில் தனித்தனியாக புகார் அளித்தனர். அந்த புகார்களின் பேரில் செக்கியூரிட்டிகள் பாரத், விக்னேஷ், செல்வகுமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அதுபோல ஆந்திர பக்தர்கள் சென்னாராவ், சாந்தாராவ் சந்தா உள்ளிட்ட பலர் மீதும் ேபாலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பக்தர்கள் மீது தாக்குதல்….. ஸ்ரீரங்கம் செக்கியூரிட்டிகள் 3 பேர் கைது
- by Authour