ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் இன்று காலை ஆந்திர பக்தர்களுக்கும், கோயில் செக்கியூரிட்டிகளுக்கும் ஏற்பட்ட மோதலில் பக்தர்கள் தாக்கப்பட்டனர். இது தொடர்பாக இருதரப்பினரும் போலீசில் புகார் செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ஆந்திர மாநில பக்தர்கள் கோயிலுக்குள் வந்ததும் காயத்ரி மண்டபத்தில் உள்ள உண்டியலை தட்டி அத்துமீறலில் ஈடுபட்டனர். இதை பார்த்த செக்கியூரிட்டிகள் பக்தர்களை கண்டித்தனர். இதனால் இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. முதலில் பக்தர்கள் தான் செக்கியூரிட்டியை தாக்கி உள்ளார். அதைத்தொடர்ந்து செக்கியூரிட்டி தாக்கி உள்ளனர் என்றனர்.