திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் 21 கோபுரங்கள் உள்ளன இதில் கிழக்கு வாசலில் நுழைவு கோபுரத்தின் முதல் நிலை மற்றும் 2 வது நிலை சுவர்கள், சில தினங்களுக்கு முன் விரிசல் ஏற்பட்டு இருந்தன.
கோவில் நிர்வாகம் சார்பாக ஏற்கனவே இதற்கு டெண்டர் விடப்பட்டதாக தகவல் தெரிவித்தனர்.
இந்நிலையில் விரிசல் அதிகமான நிலையில் முதல் நிலை கோபுரத்தின்
சுவர் நள்ளிரவில் மளமளவென இடிந்து விழுந்தது.
நள்ளிரவு 1.50 மணிக்கு இடிந்து விழுந்ததால் பெரிய அளவில் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.