திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன், கோயில்கள் தொடர்பான வழக்குகளை நீதிமன்றத்தில் தொடர்ந்து வருகிறார். கடந்த 2022ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ரங்கராஜன் நரசிம்மன் தொடர்ந்திருந்த வழக்கில், ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள ஆண்டாள் மற்றும் லட்சுமி என்ற யானைகளுக்கு என தனியாக 10 ஏக்கர் நிலம் கொள்ளிடம் ஆற்றின் கரையிலோ அல்லது தகுந்த இடத்திலோ ஒதுக்கி யானைகளை பராமரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதற்கு பதிலளித்த ரங்கராஜன் நரசிம்மன், நேர்மையான முறையில் தான் இந்த வழக்கை தொடர்ந்துள்ளேன் என்று தெரிவித்தார். வழக்கு விசாரணையின்போது வனத்துறை தரப்பில் வழக்கறிஞர்கள் சீனிவாசன் மற்றும் சாதிக் ஆகியோரும், ஸ்ரீரங்கம் கோயில் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராமும் ஆஜராகியிருந்தனர்.
இதையடுத்து, மனுதாரரின் பின்னணி குறித்து விசாரிக்க ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை மார்ச் 13ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.