Skip to content
Home » ஸ்ரீரங்கம் பொது விருந்துக்கு அழைப்பு இல்லை… இணை ஆணையர் மாரியப்பன் மீது புகார்..

ஸ்ரீரங்கம் பொது விருந்துக்கு அழைப்பு இல்லை… இணை ஆணையர் மாரியப்பன் மீது புகார்..

  • by Authour

முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி இன்று ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் பொது விருந்து நடைபெற்றது. கோவிலின் இணை ஆணையர் மாரியப்பன் ஏற்பாட்டின் அடிப்படையில் எம்எல்ஏ பழனியாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு மாநகராட்சி மேயர், ஸ்ரீரங்கம் கோட்டத்தலைவர், கவுன்சிலர் உள்ளிட்ட யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது… பிரசித்த பெற்ற கோவில்களில் நடைபெறும் பொது விருந்து நிகழ்ச்சிக்கு அமைச்சர்கள், எம்எல்ஏ, மேயர், கோட்டத்தலைவர், கவுன்சிலர் என மக்கள்பிரதிநிதிகளையும், மாவட்டக்கலெக்டர், வருவாய் அதிகாரி, தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் அனைவரும் அழைக்க வேண்டும். ஆனால் இணை ஆணையர் மாரியப்பன் இந்த நடைமுறையை பின்பற்றவில்லை. எம்எல்ஏ தவிர யாரையும் அழைக்கவில்லை என்றும் குறிப்பாக மேயர் கோட்டத்தலைவர், கவுன்சிலர் என யாரையும் அழைக்கவில்லை. இது குறித்து கேட்டதற்கும் பதில் இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வைகுண்ட ஏகாதசி  திருவிழாவின் போது பத்திரிக்கையாளர்களுக்கு பாஸ் வழங்கப்பட்ட போது அதிகாரி மாரியப்பன் முறைப்படி பாஸ் வழங்கவில்லை என புகார் எழுந்தது என்பது குறிப்பிடதக்கது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *