Skip to content
Home » ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நாளை தைத்தேரோட்டம்…

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நாளை தைத்தேரோட்டம்…

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. 7-ம் நாளான நேற்று நம் பெருமாள் உபய நாச்சியார்களுடன் நெல் அளவு கண்டருளி உத்திர வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இன்று காலை 7.30 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து நம்பெருமாள் பல்லக்கில் புறப்பட்டு உத்தரவீதிகளில் வலம் வந்து காலை 9 மணிக்கு ரெங்கவிலாச மண்டபம் வந்தடைந்தார். அங்கிருந்து மாலை 6.30 மணிக்கு குதிரை வாகனத்தில் புறப்பட்டு உத்திரவீதிகளில் வலம் வந்து நம்பெருமாள் வையாளி கண்டருளுகிறார். பின்னர் இரவு 8.30 மணிக்கு கண்ணாடி அறை சென்றடைகிறார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை நடைபெறுகிறது. நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் அதிகாலை 3.45 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு தைத்தேர் மண்டபத்திற்கு 4.30 மணிக்கு வருகிறார். 4.30 மணிமுதல் 5.15 மணிவரை ரதரோஹணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளிய பின் காலை 6 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *