ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று மாலை திருநெடுந்தாண்டகத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்குகிறது. ஜனவரி 2ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெறுகிறது. இதில் லட்சகணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும். எனவே பக்தர்கள் பாதுகாப்புக்காக ஸ்ரீரங்கம் கோயில் வளாகத்தில் புறக்காவல் நிலையத்தை நேற்று மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் திறந்து வைத்தார்.
கோயில் பிரகாரங்கள் மற்றும் வீதிகளில் 209 கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டு, திருவரங்கம் முழுவதும் போலீஸ் கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்த கமிஷனர் அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். இன்று முதல் திருவரங்கம் முபவதும் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.