அருள்மிகு ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி திருக்கோவில் வைகுண்டு ஏகாதசி விழா பகல் பத்து நான்காம் திருநாள் இன்று நடக்கிறது. இதையொட்டி நம்பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
செந்தூர நிற பட்டுடுத்தி முத்தரசன் கொரடு என்னும் திருநாரணன் முத்துக்கொண்டை அணிந்து, அதில் கலிங்கத்துராய்; நெற்றி மேல் சூர்ய வில்லை சாற்றி (சூர்ய குல திலகம் என ராமரை பாடிய ஆழ்வார் பாசுரத்திற்கு ஏற்ப), கர்ண பத்திரம்; சின்ன கல் ரத்தின அபய ஹஸ்தம்,
திருமார்பில் பங்குனி உத்திரப்பதக்கம், அதற்கு மேல் ஸ்ரீரங்கநாச்சியார் – அழகிய மணவாளன் பதக்கம்; அடுக்கு பதக்கங்கள், நெல்லிக்காய் மாலை, பவழ மாலை ,18 வட முத்து சரம் , காசு மாலை; பின்பு சேவையாக – புஜ கீர்த்தி ; சிகப்புக்கல் சூர்ய பதக்கம்; கையில் தாயத்து சரங்கள்; தங்க தண்டைகள் திருவடியில் அணிந்து நம் பெருமாள் சேவை சாதித்தார். ஏராளமான பக்தர்கள் நம்பெருமாளை தரிசித்து வருகிறார்கள்.