108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலுக்கு நாள் தோறும் பக்தர்கள் வந்து அரங்கநாதரை தரிசிக்கிறார்கள். இங்கு மூலவராக பெருமாளும், உற்சவராக நம் பெருமாளும் உள்ளனர். விழாக்காலங்களில் உற்சவர் நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
நம் பெருமாளுக்கு 3160 கேரட் மாணிக்க கல், 600 வைர கற்கள் மற்றும் மரகதக் கல்லை கொண்டு வடிவமைக்கப்பட்ட வைர கிரீடத்தை பரதநாட்டிய கலைஞரான ஜாகிர் உசேன், காணிக்கையாக வழங்கினார். ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் மாரியப்பன், தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டரிடம் இந்த காணிக்கையினை அவர் வழங்கினார்.