Skip to content

ஸ்ரீரங்கம் : 5 கடைகளில் ஒரே இரவில் திருட்டு

  • by Authour

ஸ்ரீரங்கம் கீழ சித்திரை வீதியில்  ஓட்டல் மற்றும் பாத்திரக்கடையில்  நேற்று திருட்டு நடந்துள்ளது. மா்ம நபர்கள் உள்ளே புகுந்து  பணம் மற்றும் பொருட்கைடிள எடுத்து சென்று விட்டனர்.  கல்லாப்பெட்டியில் இருந்தும் பணத்தை அள்ளிச்சென்று உள்ளனர்.

இதே போன்று மூலத்தோப்பு பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையின் பூட்டும் உடைக்கப்பட்டு அந்த கடையில் இருந்த பொருட்கள் மற்றும் பணத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்று உள்ளனர்.

கலைவாணர் தெருவில் உள்ள சலூன் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளது.  மாம்பழச் சாலையில் உள்ள ஒரு கடையில் பணத்தை திருடிக் கொண்டு அங்கிருந்த டின் பீர்களை கொள்ளை கும்பல் குடித்து விட்டு சென்று விட்டனர்.

இன்று காலை கடையை திறக்க சென்ற வியாபாரிகள்  கடைகள்  உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.  தகவல் அறிந்து  போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட் டு தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.மேலும் அந்தப் பகுதியில் உள்ள சிசிடி கேமராவையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கொள்ளை கும்பல் இருசக்கர வாகனத்தில் குல்லா அணிந்து கொண்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

இந்த கொள்ளை சம்பவங்கள் அனைத்தும் அடுத்தடுத்து நடந்த காரணத்தால் 5 கடைகளிலும் கொள்ளை அடித்து சென்ற மர்ம ஆசாமிகள் ஒரே கும்பலை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது
இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம்  போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனையின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு ஐந்து கடைகளில் கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

 

error: Content is protected !!