108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் மாதாந்திர உண்டியல்கள் மற்றும் வைகுந்த ஏகாதசி சிறப்பு உண்டியல்கள் இன்று கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்து முன்னிலையில் திருச்சி மண்டல உதவி ஆணையர் ம.லட்சுமணன் மேற்பார்வையில் திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களால் பக்தர்களின் காணிக்கைகள் கணக்கிடப்பட்டது.
பக்தர்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டதில் மாதாந்திர உண்டியல்கள் மூலம் 1,46,45 ,100 ரூபாய்யும் , ஸ்ரீவாரி உண்டியல் மூலம் 11,43,869 ரூபாயும் , வைகுந்த ஏகாதசி சிறப்பு உண்டியல்கள் மூலம் 5,14,664 ரூபாயும் , ஆக மொத்தம் 1,63,03,633 ரூபாயும் தங்கம் 185கிராம் , வெள்ளி 4642 கிராம் மற்றும் 487 வெளிநாட்டு ரூபாய்தாள் வரப்பெற்றது, இதற்கு முன்பு 28.01.2020 அன்று உண்டியல்கள் திறப்பின் போது மாதாந்திர உண்டியல்கள் மற்றும் வைகுந்த ஏகாதசி சிறப்பு உண்டியல்கள் மூலம் 1,16,62,314 ரூபாய் காணிக்கையாக வந்ததே அதிகபட்சமாக இருந்து வந்தது குறிப்பிடதக்கது .