புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் தோப்புகொல்லையில் இலங்கை தமிழர்களுக்கான மறுவாழ்வு முகாம் ரூ. 5.76 கோடியில் கட்டப்படுகிறது. இதற்கான பூமி பூஜை இன்று நடந்தது. இதில் பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கலெக்டர் அருணா, ஒன்றிய தலைவர் வள்ளியம்மை தங்கமணி மற்றும் அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.