இலங்கை அதிபர் அநுர குமார இந்தியா வந்துள்ளார். அவர் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினாா். பின்னர் மோடியும், அநுர குமாரவும் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். மோடி முன்னிலையில், அநுர குமார கூறியதாவது:, “இரு நாடுகளுக்கும் மிகப்பெரிய சிக்கலாக மாறியுள்ள மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர மற்றும் நிலையான தீர்வைக் காண விரும்புகிறோம். அந்தபகுதியில் உள்ள மீனவர்களால் இழுவை படகுகள் மூலம் மீன்பிடிக்கும் முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அது இத்தொழிலுக்கு அழிவை ஏற்படுத்தும் என்பதால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்றார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்தபோது, அதில் இருந்து மீண்டு வர இந்தியா எங்களுக்கு பெரும் ஆதரவை வழங்கியது என்றும் அநுர குமார தெரிவித்தார்.