இலங்கை நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடந்தது. தேர்தல் முடிந்ததும் இரவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 225 உறுப்பினர்கள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் 196 எம்.பி.க்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்த 196 இடங்களுக்கு பல்வேறு கட்சிகள் சார்பிலும், சுயேச்சையாகவும் 8,821 பேர் போட்டியிட்டனர்.இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 225 இடங்களில் தனிப் பெரும்பான்மை பெற 113 இடங்கள் தேவையென்ற நிலையில், தேசிய மக்கள் சக்தி 123 இடங்களை கடந்துள்ளது.இதன் மூலம் வலுவான நாடாளுமன்றத்தை அநுரகுமார திசாநாயக தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அமைக்கவுள்ளது.
இன்று காலை 10.30 மணி நிலவரப்படி, ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தி 123 இடங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 31 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.இலங்கை தமிழ் அரசு கட்சி – 3 , புதிய ஜனநாயக முன்னணி – 3 இலங்கை பொதுஜன கட்சி – 2, ஐக்கிய தேசிய கட்சி – 1, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு – 1, இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் – 1அகில இலங்கை தமிழ்காங்கிரஸ் – 1 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.தேசிய மக்கள் சக்தி 61.7 சதவிகித வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சக்தி 17.72 சதவிகித வாக்குகளையும் பெற்றுள்ளன