நாகை மாவட்டம் செருதூர் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இலங்கை கடற் கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டி மீன்பிடி வலைகள், ஜிபிஎஸ் கருவி,செல்போன், மீன்கள் ஆகியவற்றை பறித்து சென்றனர். கரை திரும்பிய மீனவர்கள் இது குறித்து வேதனை தெரிவித்தனர். 4 பைபர் படகில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான மீன்பிடி வலை உள்ளிட்ட உபகரண பொருட்களை கடற்கொள்ளையர்கள் அள்ளிச்சென்று விட்டனர்.
