Skip to content
Home » மயிலாடுதுறை மீனவர்கள் மீது சிங்கள ராணுவம் கொடூர தாக்குதல்

மயிலாடுதுறை மீனவர்கள் மீது சிங்கள ராணுவம் கொடூர தாக்குதல்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம், சாத்தகுடி கிராமத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க கடந்த 21 அன்று இரவு 12 மணி அளவில் கடலுக்குச் சென்றனர் நேற்று அதிகாலை 4 மணி அளவில் 6 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டனர். நேற்று மாலை கரைதிரும்பிய  மீனவர்களுக்கு  தரங்கம்பாடியில் முதல்  உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

தற்போது 5 மீனவர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் தாக்குதலுக்கு உள்ளான ஐந்து மீனவர்கள் பற்றி அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், நேற்று வேல்முருகன்(42) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் கடந்த 21ம்தேதி இரவு அதே பகுதியை சேர்ந்த பாலசுப்ரமணியன்(42), ,அருண் குமார்(39), மாதவன் ,கார்த்தி(32), முருகன்(55) மற்றும் படகின் உரிமையாளர் உட்பட 6 பேரும் அதிகாலை 4  மணியளவில் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு அவர்களது திசைக்காட்டும் கருவி, வாக்கி டாக்கி, மீன்கள் மற்றும் படகு இன்ஜின் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளனர்.

தாக்கப்பட்டவர்களில்  வேல்முருகன் மற்றும் பாலசுப்ரமணியன் என்பவர்களுக்கு கை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அதில், அருண்குமார் என்பவருக்கு காதில் ரத்தக் கசிவும், மாதவன் மற்றும் கார்த்தி ஆகியோருக்கு முதுகு மற்றும் தோள்பட்டையில் பலத்த உள்காயமும் ஏற்பட்டுள்ளது மேற்கண்ட நபர்கள் அனைவரும் நேற்று மாலை 5 மணியளவில் பொறையார் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி செய்யப்பட்டது.

தற்போது மேல்சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமனையில் நேற்று இரவு முருகன் என்பவரைத் தவிர மற்ற 5 நபர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று இரவு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மீனவர்களிடம் ஆறுதல் கூறினார் அவருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . என்.எஸ்.நிஷா மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் செல்வி.யுரேகா, மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சஞ்சீவ் குமார், தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுணா சங்கரி, உதவி இயக்குனர் மீன்வளம் ராஜேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காரைக்கால் தென்கிழக்கpy;  44 நாட்டிகல் தொலைவில் கோடியக்கரைக்கு தென்கிழக்கு கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் வலையை பறித்துக் கொண்டதுடன் இரும்பு ரோப்பால் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் ஐந்து மீனவர்கள் பலத்த காயமடைந்தனர். தொடர்ந்து உடலில் ரத்த கட்டுக்கள் ஏற்பட்டதுடன் ஒரு மீனவருக்கு லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தங்கள் மீது இலங்கை கடற்படையினர் 12 பேர் அடங்கிய குழுவினர் வந்து கொடூர தாக்குதல் நடத்தியதாகவும், தங்களிடம் எந்த விளக்கமும் கேட்கவில்லை என்றும் பேச விடாமல் தாக்கியதாகவும் தங்களிடம் இருந்த படகு எஞ்சின் ஜிபிஎஸ் கருவி வலைகள் ரெண்டு பேட்டரி ஆகியவற்றை பறித்து சென்றதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர் மீது வழக்கு பதிவு செய்ய கடலோர காவல் படை குழுமத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது, மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள காயங்கள் குறித்தும், அவர்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீடுகள் குறித்தும் தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர் மீது மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *