இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது,1974ம் ஆண்டு கச்சத்தீவை இலங்கைக்க கொடுக்க ஒப்பந்தம் உருவானது. அப்போது தமிழகத்தில் கருணாநிதி முதல்வராக இருந்தார். இருவரும் சேர்ந்து தான் கச்சத்தீவை கொடுத்து விட்டார்கள்என தற்போது பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் கூறிவருகிறார்கள். இங்குள்ள பாஜக நிர்வாகிகளும் இதை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தி வருகிறார்கள்.
இதற்கு பதிலளித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், 10 ஆண்டுகளாக கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுத்தீர்களா? இதுவரை கும்பகர்ண தூக்கத்தில் இருந்தவர்களுக்கு இப்போது தான் கச்சத்தீவு ஞாபகம் வந்ததா? தோல்வி பயத்தில் இப்படி பழைய பிரச்னைகளை கிளப்புகிறீர்கள்.
வெள்ளநிவாரணம் ஒரு பைசா வழங்கவில்லை, ஒருரூபாய் வசூலித்தால் தமிழகத்திற்கு 29 காசுதான் திரும்ப தருகிறீர்கள். இதற்கு பதில் சொல்லுங்கள் என்றார். இதனால் பாஜகவினர் கச்சத்தீவும் நமக்கு கைகொடுக்கவில்லை என்ற நிலையில் உள்ளனர்.
இந்த சூழலில், கச்சத்தீவு விவகாரம் குறித்து இலங்கை மந்திரி ஜீவன் தொண்டமான் பிரபல நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
“இலங்கையை பொறுத்தவரையில் கச்சத்தீவு இலங்கையின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இந்தியா- இலங்கை உடனான வெளியுறவுக் கொள்கை ஆரோக்கியமாக உள்ளது. கச்சத்தீவை திதிரும்ப ஒப்படைக்கும்படி இந்திய அரசு இதுவரை, எங்களிடம் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. அவ்வாறு இந்திய அரசிடமிருந்து கோரிக்கை ஏதும் இருந்தால், இலங்கை வெளியுறவுத்துறை அதற்கு பதிலளிக்கும் என்றார்.