இந்தி திரையுலகின் பிரபல நடிகையான மறைந்த ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். இவர் தடக் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலில் இன்று காலை திடீரென சாமி தரிசனம் செய்ய சென்றார். ம் அவருடன், நடிகை ஸ்ரீதேவியின் இளைய மகள் மற்றும் ஜான்வி கபூரின் தங்கையான குஷி கபூரும் உடன்வந்தார். அவர்கள் இருவரும் தென்னிந்திய பாரம்பரிய உடைகளான பாவாடை தாவணியில் வந்திருந்தனர்.
கோவிலில் பீடத்தின் முன் இருவரும் குனிந்து, சாஷ்டாங்கமாய் தலை வணங்கி கும்பிட்டனர் நடிகை ஜான்வியின் காதலர் என
கிசுகிசுக்கப்படும் ஷிகார் பஹாரியாவும் அவர்களுடன் ஒன்றாக சாமி தரிசனம் செய்ய வந்து உள்ளார். இருவரும் தங்களுக்கு இடையேயான உறவை பற்றி வெளிப்படையாக இதுவரை எதுவும் வெளியுலகுக்கு தெரிவிக்கவில்லை.
ஆனால், பல்வேறு தருணங்களில் இருவரும் ஒன்றாக பல இடங்களில் சுற்றி திரிந்து உள்ளனர். ஷிகார், மராட்டியத்தின் முன்னாள் முதல்-மந்திரியான சுஷில் குமார் ஷிண்டேவின் பேரன் ஆவார். ஷிகார் தொழில் முனைவோராகவும், போலோ விளையாட்டு வீரராகவும் மற்றும் ஏழைகளுக்கு கல்வி உள்ளிட்ட உதவிகளை செய்பவராகவும் இருந்து வருகிறார்.