ஸ்ரீ ஞான புராணத்தில் ஸ்ரீ கற்க மகரிஷியால் வர்ணிக்கப் பட்டிருக்கின்ற 108 கணபதி ஸ்தலங்களுள் 81 வது ஸ்தலம் ஸ்ரீ சித்தி, புத்தி ஸமேத அருள்மிகு தக்ஷிணா மூர்த்தி விநாயகர் திருக்கோயில். பாபநாசம் தாலுக்கா தஞ்சாவூரிலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் மெலட்டூரில் தனிக் கோயிலாக எழுந்தருளியுள்ளார் தக்ஷிணாமூர்த்தி விநாயகர். மூலஸ்தானத்தை சுற்றி வரும் பிரகாரம், த்வஜம்பத்தை சுற்றி வரும் பிரகாரம், கோயிலுக்கு வெளியில் அமைந்துள்ள பிரகாரம் என 3 பிரகாரங்களை கொண்டுள்ளது. சண்டீகேஸ்வரருக்கு தனி மண்டபம், பைரவருக்கு தனி மண்டபம், அலங்கார மண்டபம், வசந்த மண்டபம், யாக சாலை, மடப் பள்ளி என
அழகுற அமைந்துள்ள இந்த திருக்கோயிலில் விநாயக சதுர்த்தியை முன்னிட்டு 10 நாட்கள் பிரம்மோத்ஸவம் நடைப் பெறும். நேற்று உலக ஷேமத்திற்காக உபயதாரர் சார்பில் ஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி விநாயகருக்கு அம்பாள் ஸ்ரீ சித்தி, புத்தி யுடன் திருக்கல்யாணம் நடந்தது. ஆகம விதிப்படி நடந்த திருமண நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருக்கல்யாண வைபவத்திற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகி குமார் உட்பட செய்திருந்தனர்.