திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே குண்டூர் 100 அடி சாலையில் ஸ்ரீ திரிபுர சுந்தரி சமேத திரிபுரசுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது.
இத்திருக்கோவிலில் ஐப்பசி மாதம் பௌர்ணமியை முன்னிட்டு மூலவர்
ஸ்ரீ திரிபுர சுந்தரேஸ்வரர் சுவாமிக்கு அரிசி சாதம் கொண்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அரிசி சாதம், காய்கறிகள் கொண்டு
சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேவாரம், திருவாசக பாடல்களை பாடி, ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய என்ற முழக்கத்துடன் சிவபெருமானை வழிபட்டனர்.