நாகப்பட்டினம் மாவட்டம், திருப்பூண்டி அடுத்த காரப்பிடாகை கிராமத்தில் ஸ்ரீ சிவ சாய்பாபாவின் முதலாம் ஆண்டு பால்குட பல்லக்கு ஊர்வலம் நடைபெற்றது . பால்குடம் மற்றும் பல்லக்கு ஊர்வலம் காரப்படாகை அய்யனார் கோவில் அருகே அமைந்திருக்கும் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் இருந்து பால்குடம் மற்றும் பல்லக்கு
ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, சாய்பாபாவிற்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாய்பாபாவிற்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து, அஷ்டோத்திர நாமாவளி அர்ச்சனையும், மஹாதீபாராதனையும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 18வகையான மலர்களைக்கொண்டு, புஷ்பாஞ்சலி சேவை நடைபெற்றது.